ராணுவத்தின் பிடியில் இருக்கும் தமிழர்களின் நிலங்களை திரும்ப வழங்க வேண்டும் : ஆர்.சம்பந்தன்

இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களை இலங்கை ராணுவமானது ஆக்கிரமித்து உள்ளது. தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றது.இதுகுறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவரும் தமிழர் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் பேசியதாவது:-

ராணுவப் பயன்பாடு என்ற பெயரில் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு கையகப்படுத்தியது. இதனால் தங்களின் பூர்விக நிலங்கள் பறிபோன கவலையில் தமிழர்கள் இருக்கிறார். நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன், அந்த நிலங்கள் யாவும் அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. நிலங்கள் திரும்ப வழங்கப்படாததால் அதிபர் சிறீசேனா தலைமையிலான அரசு மீது தமிழர்கள் மிகுந்த மனக் கசப்பில் உள்ளனர் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறையானது, தனிப்பட்ட முறையில் என்னையும் கவலையடையச் செய்துள்ளது என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறேன்.

எனப் பேசினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ,“ராணுவம் கையகப்படுத்திய தமிழர்களின் நிலங்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது வரை சுமார் 2,400 ஏக்கர் நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 4,100 ஏக்கர் நிலங்களை வழங்க வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply