வெள்ளை மாளிகை விருந்தில் கலந்து கொள்ள மாட்டேன்: அதிபர் டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டிற்கான வெள்ளை மாளிகையின் நிருபர்கள் ஆணையத்தின் ஆண்டுவிழா விருந்தில் கலந்து கொள்வதில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான பாரம்பரியத்தை டிரம்ப் மீறுகிறார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் வெள்ளை மாளிகை நிருபர்கள் ஆணையத்தின் விருந்து நிகழ்வில் நான் கலந்து கொள்ள மாட்டேன் இவ்வாறு தனது ட்வீட் மூலம் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்து விடுங்கள். என அவர் குறிப்பிட்டுள்ளார்.      

 

அமெரிக்காவின் எதிரிகளாக ஊடகத்தினர் இருக்கின்றனர் என அவர் தெரிவித்திருந்தார். வெள்ளை மாளிகையில் நடக்கும் இந்த விருந்தில் அமெரிக்க அதிபர் மற்றும் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வர். முதல் முறையாக இந்த விருந்து வாஷிங்டன் டிசியில் 1920 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

 

 

இந்த ஆண்டின் விருந்து ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி சேகரிக்க தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply