அமெரிக்க பார்லிமென்ட்டில் முதன் முறையாக அதிபர் டிரம்ப் உரை
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் முதன் முறையாக அந்நாட்டு பார்லிமெண்டில் பேசினார்.அவர் பேசியதாவது: கன்சாஸ் மாகாணத்தில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற செயல்கள் இனி தொடராமல் இருந்து நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அமெரிக்காவில் சொந்த நாட்டினருக்கே முன்னுரிமை தரப்படும். அமெரிக்கா மீண்டும் தலைமை வகிக்க தயாராகிவிட்டது. வெளிநாட்டினருக்கான வேலியை அமைக்க வேண்டும்.
வெளிநாட்டினவர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்காக கட்டுப்பாடு அமெரிக்கர்களை பாதுகாக்கும். அமெரிக்காவினருக்கான ஆயிரக்கணக்கான வேலைகள் காத்திருக்கிறது அதற்கான உட்கட்டமைப்புகள் அமைக்கப்படுகிறது . அமெரிக்கா வலுவாகவும், சுதந்திரமாகவும் இருந்து வருகிறது. அமெரிக்கா- மெக்சிக்கோ இடையேயான சுவரை கட்டும் பணி துவங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply