கேப்பாபுலவு 42 ஏக்கர் காணி அரசாங்க அதிபரிடம் கையளிப்பு : இராணுவ பேச்சாளர்
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதிகளிலுள்ள 42 ஏக்கர் காணியை உரிய மக்களிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் இன்று கலந்துகொண்ட போதே இராணுவ பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
காணியை மீளப்பெறுவதற்காக போராட்டம் நடத்திய மக்களிடம் காணி கையளிக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன பதிலளிக்கையில் இது பற்றிய விபரங்கள் அறியப்படவில்லை ஆனால் காணியை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கெதள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply