ஜனாதிபதி 6 ஆம் திகதி இந்தோனேஷியா விஜயம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நாளை மறுதினம் (06 ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை அந்நாட்டுக்கு செல்லவுள்ளார்.

அந்த விஜயத்தின்போது, வர்த்தக முதலீடுகள், போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், இருதரப்பு உறவுகளைப் பேணும் வகையிலும், பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைகள் என்பன இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply