மாற்றுத் திறனாளிகள் போராட்டம் எதிரொலி: நடிகர் ராதாரவி வீட்டில் போலீஸ் குவிப்பு

தங்க சாலையில் சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.அப்போது மாற்றுத் திறனாளிகளை குறிப்பிட்டு அவர் பேசியதற்கு மாற்றுத் திறனாளிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தனர்.மேலும் தேனாம்பேட்டையில் உள்ள ராதாரவி வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து ராதாரவி வீட்டின் முன்பு இன்று போலீசார் குவிக்கப்பட்டனர்.

நான் மாற்று திறனாளிகளை புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. நான் சார்ந்து இருக்கும் லயன்சு சங்கம் மூலம் அவர்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்து வருபவன். மாற்று திறனாளிகள் பள்ளிக்கு என் தந்தை பெயரில் வகுப்பறையே கட்டி கொடுத்தவன். எந்த காலத்திலும் அந்த சகோதரர்களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் என்னிடம் வராது.
இப்போது கூட அந்த அமைப்பினரிடம் பேசும் போது நானும் உங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்ய தயாராக இருக்கிறேன் என்றேன்.

தங்க சாலை கூட்டத்தில் நான் பேசிய கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி கனிமொழி எம்.பி.யிடமும் விளக்கிச் சொன்னேன்.

நான் பேசியது அவர்களின் மனம் வருந்தும்படி இருந்தால் அதற்காக நான் மன வருத்தப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply