தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு அரசியல் யாப்பு தேவையற்றது: ரத்ன தேரர்

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் நாட்டுக்கு தேவையானது புதிய அரசியல் யாப்பு அல்லவெனவும், தேசிய அபிவிருத்தி திட்டமே எனவும் இலங்கை தேசிய மகா சபையின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை சீனாவினதும், இந்தியாவினதும் தேவைக்கு ஏற்ப மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. நாட்டின் காணிகளை நினைத்தவாறு வெளிநாட்டவருக்கு வழங்காமல் இருப்பதற்கு, தேசிய காணிக் கொள்கையொன்று வகுக்கப்பட்டு அதன்படி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் கூறியுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சிலரின் தேவைக்கு ஏற்ப செயற்படக் கூடியவர் அல்ல எனத் தெரிவித்துள்ள தேரர், ஜனாதிபதி தேசியப் பிரச்சினைகளின் போது தீர்மானம் எடுக்க தாமதிக்கும் ஒவ்வொரு பொழுதும் ஆபத்தானது எனவும் இன்றைய சகோதர வார இதழொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply