மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் புதிய அறிக்கையை நிராகரித்தார் சிறிசேன
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் புதிய அறிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, உறுதியாக நிராகரித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு போரின்போது நடைபெற்ற தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பணியில் உதவ வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமுடியாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக, அதற்கு அவர் ஒத்துக்கொண்டிருந்தார்.
தவறிழைத்த இராணுவப் படைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கப்போவதில்லை என்றும் இலங்கை அதிபர் கூறியிருக்கிறார்.
நீதி குறித்த தனது சொந்த கடப்பாடுகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பது கவலையளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று கூறியிருந்தது.
காவலில் எடுக்கப்படும் மக்கள், தற்போதும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், மனித உரிமை பணியாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைப்பதாக அது மேலும் தெரிவித்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply