இந்திய மீனவர் கொலை: இலங்கை கடற்படை மறுப்பு
இந்திய மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, இலங்கை கடற்படை பேச்சாளர், லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று மறுத்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வர மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கச்சத்தீவு அருகேவந்து மீன்பிடியில் பிரிட்கோ எனப்படும் மீனவர் நேற்றிரவு 8.30 மணியளவில் சுடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும், அவருடன் வந்த சரவணன் என்பவர் காயமுற்றுள்ளதாகவும் இந்திய மீனவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் குளஞ்சிநாதன் இந்திய ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார்.
மேலும் சில மீனவர்கள் காயங்கள் எதுவும் இன்றி அதிகாலை 12.30 அளவில் ராமேஸ்வரம் சென்றடைந்ததாக மீனவ சங்கத் தலைவர்
நேற்றைய தினம் சுமார் 2000 ஆயிரம் மீனவர்கள் வரை குறித்த கடற்பிராந்தியத்தில் மீனபிடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டாலும் எச்சரிக்கை மாத்திரமே விடுக்கப்படும் எனவும் இலங்கை கடற்படையினர் யார் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என கடற்படை பேச்சாளர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply