அமைச்சர்களுக்கு புதிதாக வாகன கொள்வனவுக்கு 54 கோடி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் நடுவில் அமைச்சர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 6 அமைச்சர்கள், 3 இராஜாங்க அமைச்சர்கள், 2 பிரதி அமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோருக்கு சுகபோக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
53 கோடியே 99 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபா இவ்வாறு கோரப்பட்டுள்ளது.இது தவிர பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபா வழங்குவதற்கும் இன்று அனுமதி கோரி பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 44 கோடி ரூபா வேண்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply