அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய தொழில்நுட்பத்தை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

சர்வதேச நாடுகளின் அதி பயங்கர ரகசியங்களை அவ்வப்போது அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் என்றைக்குமே அமெரிக்காவுக்கு தலைவலி தான். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் அணு சோதனைகள் குறித்த தகவல்களை வெளியிட்டதாக கூறி விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சே-வை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. தற்போது ஈக்குவேடார் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அசாஞ்சே அங்கிருந்தும் தனது வேலையை காட்டி வருகிறார்.

 

இந்நிலையில், வால்ட் 7 என்ற பெயரில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். சி.ஐ.ஏ பற்றிய ரகசிய ஆவணங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் லீக்காவது இதுதான் முதல்முறை என்கிறது விக்கிலீக்ஸ். சி.ஐ.ஏவின் ரகசிய ஹாக்கிங் திட்டத்தைப் பற்றிய 8,761 ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த ஆவணங்களில் ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்ட், சாம்சங் டிவிக்கள், விண்டோஸ் போன் போன்றவற்றை ஹாக் செய்து ரகசிய மைக்ரோபோனாக பயன்படுத்தும் அளவுக்கு சி.ஐ.ஏ திட்டமிட்டிருந்தது விளக்கப்பட்டுள்ளது.  இத்தகைய தொழில்நுட்பங்களை அமெரிக்க பொறியாளர்களே வடிவமைத்து கொடுக்கின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply