சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் மகளீர் தின வாழ்த்துச்செய்தி
உலக மகளிர் தின வாழ்த்துகள்..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்
என்றே கொள்ளலாம்.
“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை… அப்படியே தவம் செய்து, இப்பிறப்பை அடைந்ததாய், பெருமையுடன் எண்ணிக் கொண்டு, இந்த “அகில உலக மகளிர் தினத்தில்”… அனைத்து மங்கையர்க்கும், எனது வாழ்த்துக்களுடன் சில வரிகள்…!
அன்பு – இந்த
அழகான சொல்லுக்கு
முதல் அர்த்தம்
அம்மா.
எப்போதும் சீண்டி
தோல்விகளில் தூண்டி
தன்னை நமது
முதல் குழந்தையாகவே
காட்டிக் கொள்வாள்
தங்கை.
நம்மில் பாதியாய்
நம் கரம் பற்றி
நம்மை முழுமையாக்குபவள்
மனைவி.
நம் வாழ்வின்
அடையாளமாய்,
அங்கீகாரமாய்,
வசந்தம் தரும் தேவதையாய்
மகள்.
பெண்கள் இல்லாத உலகம்
நிச்சயம் சாத்தியப் படாது.
இந் மகளிர் தின நன்நாளில் பெண்மையைப் போற்றுவோம்.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன.
இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும் .
வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது.
1789ம் ஆண்டு ஜூன் 14ம் ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்!.
ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!.
டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.
பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார்.
அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, “மகளிர் தின”மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!
ஊடகப்பிரிவு
சிறீரெலோ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply