மீனவர்கள் நவீன படகுகள் வாங்க ரூ.1 கோடி கடன்: பிரதமர் மோடி தகவல்

யூனியன் பிரதேசமான டையூ தீவு நகரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:-

நம் நாட்டில் ஆண், பெண் பாலின விகிதம் 1000:800 என உள்ளன. ஆனால் இங்கு 1000:1040 என்ற விகிதத்தில் ஆண், பெண் பாலினம் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

 

இந்திய கடலோர பகுதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாகர்மாலா திட்டத்தில் இதற்காக ரூ.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 

மீனவர்கள் தனித்தனியாக சிறிய படகுகளில் சென்று கடலில் வெகுதூரம் மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளது. இந்த குறையை போக்க அதிநவீன படகுகளை மீனவர்கள் வாங்க ரூ.1 கோடி வரை கடன் வழங்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் இந்த கடன் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டம் நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும்.

 

இதற்காக மீனவர்கள் தங்கள் கிராமங்களில் ஒரு குழுவை அமைத்து கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். நவீன படகுகளில் மீனவர்கள் 12 கடல் மைல் தூரம் சென்று அதிக அளவில் மீன் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.

 

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply