நேபாளத்தில் மாதேசிகள் கொல்லப்படுவது கவலையளிக்கிறது – இந்திய வெளியுறவு அமைச்சகம்
நேபாள நாட்டில் இந்திய வம்சாவளி இனத்தவரான மாதேசிகள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்நாட்டின் புதிய அரசியலமைப்பில் மாதேசிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை எனக் கோரி அவர்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு எதிராக சப்டாரி மாவட்டத்தில் மாதேசி இனத்தவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது மாதேசி இனத்தவர்களுக்கும் ஆளும் மாவோயிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, போலீசார் அங்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாதேசி இளைஞர்கள் பலியானார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே ,”நேபாளத்தில் அமைதி நிலவ இந்தியா தனது ஆதரவை எப்போதும் அளிக்கும். அதே வகையில் போராட்டத்தில் ஈடுபடும் மாதேசி இளைஞர்கள் கொல்லப்படுவது கவலைக்குறிய வகையில் இருக்கிறது. மேற்கொண்டு அங்கு வன்முறை நிகழாமல் இருக்க இந்தியா தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.” எனக் கூறினார்,
கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 50 மாதேசி இனத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply