பாகிஸ்தானில் இந்துப் பெண் கோடரியால் வெட்டிக்கொலை

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாக பலுசிஸ்தான் மாகாணம் திகழ்கிறது. அங்கு நசிராபாத் மாவட்டத்தில் பாபா காட் பகுதியில் வசித்து வந்தவர், ஜானியா குமாரி. இந்துப் பெண். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் வந்து, அவரை கோடரியால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பினர். இந்தப் படுகொலையின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இருப்பினும் இதுபற்றி கொல்லப்பட்ட ஜானியா குமாரியின் சகோதரர் ஜாலோ ராம் கூறும்போது, “என் சகோதரியை அந்தப் பகுதியில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் காரணமே இன்றி கொலை செய்து விட்டனர். இந்தப் படுகொலை தொடர்பாக குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்றார். இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப்பகுதியில் வாழ்கிற சிறுபான்மை இந்து மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply