மோடியின் வெற்றிப் பயணம்: தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீதான மக்களின் தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.தலைநகர் டெல்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசம், 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 403 பேர்.முதலமைச்சர் வேட்பாளர் யாரையும் பாரதீய ஜனதா அறிவிக்கவில்லை. மோடிதான், பிரசாரத்தின் மையமாக இருந்தார்.
கார்ட்டூன்: உ.பி: தேர்தல் சின்னங்கள், தேர்தலுக்குப் பிறகு!
உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக ஆட்சி?
பாரதீய ஜனதாவுக்கு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி என்று பார்க்கப்பட்ட சமாஜவாதி – காங்கிரஸ் கூட்டணி, மாயாவதியின் பகுஜன் சமாஜ கட்சிக்கு எதிராக, வளர்ச்சியை மையமாகக் கொண்டு மோடி கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்த வெற்றி பாரதீய ஜனதாவுக்கு என்ன அர்த்தத்தை கொடுக்கிறது?
அதிகாரம், தற்போது பாரதீய ஜனதாவின் பக்கம் வலுவாகச் சாய்ந்திருக்கிறது.
சமூக ஒருங்கிணைப்பு என்று சொல்லக்கூடிய, நடுத்தர வகுப்பு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர் சாதியினர் என அனைத்துத் தரப்பினரையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கும் பணியை பாரதீய ஜனதா செய்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
“சாதி அரசியலைத் தாண்டி மக்களின் நம்பிக்கை பெற்றுள்ளார் மோடி. களத்தில், பாரதீய ஜனதா சாதிக் கட்சியாகப் பார்க்கப்படவில்லை” என்று கொள்கை ஆய்வு மையத்தின் பானு ஜோஷி கூறுகிறார்.
உ.பி. தேர்தல் முடிவு குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?
`அகிலேஷ் – ராகுலை விட இளைஞர்களின் பெரிய அடையாளம் மோடி’
மேலும், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு நீக்கத்தால் நடுக்கத்தில் இருந்த பாரதீய ஜனதா கட்சி இந்த முடிவால் ஊக்கம் பெற்றிருக்கிறது.
அடுத்து, தனது முதல் ஆட்சிக் காலத்தின் மத்தியில், 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கு முதன்மை வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.
இன்னொரு காரணம், எதிர்க்கட்சியின் பலவீனமான நிலை. பஞ்சாப்பில் வெற்றி பெற்றிருந்தாலும், உத்தரப் பிரதேசத்தில் வீழ்ந்து பல காலம் ஆன பிறகும் அதனால் எழுந்து நிற்க முடியவில்லை.
ஆம்-ஆத்மி
டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம்-ஆத்மி கட்சி, பஞ்சாப் மற்றும் கோவாவில் வெற்றிபெற முடியாமல் போனதால், அது தேசிய இலக்கை நோக்கிய பயணத்தில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
பா.ஜ.கவுக்கு கிடைத்த ஹோலி பரிசு ; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
இன்னொரு புறம், பாரதீய ஜனதாவின் வெற்றி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அது பலம் பெற்று, பல முக்கிய மசோதாக்களை எளிதாக நிறைவேற்றிவிட முடியும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், மக்களுடன் மோடிக்கு உள்ள அந்த நெருக்கம், இன்னும் மங்காமல் இருக்கிறது.
எதிர்க்கட்சிகள், மோதியை எதிர்கொள்ள, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் புதிய அணுகுமுறை இல்லாமல் செயல்படுவதுதான் அவர்களின் முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், எதிர்பார்ப்பது நடக்காமல் போவதும், எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுவதும்தான் அரசியல். 2004-ம் ஆண்டு, பலமான தலைவராகப் பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் வாஜ்பாய், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் தோற்றது அதற்கு உதாரணமாகப் பார்க்கப்படுகிறதது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply