வாட்ஸ்அப் செயலியில் பழைய ஸ்டேட்டஸ் அம்சம் மீண்டும் வழங்கப்படுகிறது
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் புதிய அப்டேட் மூலம் புகைப்படம், வீடியோ மற்றும் ஜிஃப் பைல்களை வைக்கும் வசதி வழங்கப்பட்டது. பழைய ஸ்டேட்டஸ் ஆப்ஷனில் வார்த்தைகளை டைப் செய்து கொள்வது, எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் வழங்கிய புதிய அப்டேட் அதன் பயனாளிகள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
புதிய அப்டேட் ஸ்நாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய அப்டேட் பலருக்கும் பிடிக்காததை அறிந்து வாட்ஸ்அப் மீண்டும் பழைய ஸ்டேட்ஸ் வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது. எனினும் தானாக மறையும் புதிய ஸ்டேட்டஸ் அம்சத்தினை வாட்ஸ்அப் திரும்ப பெறாது.
இந்நிலையில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.17.95 பதிப்பில் பழைய படி வார்த்தை மற்றும் எமோஜிக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அப்டேட் போல 24 மணி நேரத்தில் ஸ்டேட்டஸ் அழிந்து போகாது. மெனு பட்டனில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் போன் நம்பரை பார்க்க முடியும்.
இதே போன்று பழைய படி ஸ்டேட்டஸ் செட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேட்டஸ் மாற்றங்களுடன் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கென தனி பட்டன்கள் வழங்கப்படும். இத்துடன் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள கால் பட்டனினை பயன்படுத்த வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply