ஜப்பானில் சௌதி மன்னர்: நட்சத்திர விடுதியில் ஆயிரக்கணக்கான அறைகள் பதிவு

சுமார் 50 ஆண்டுகளில் சௌதி மன்னரால் மேற்கொள்ளப்படும் முதலாவது ஜப்பான் பயணமாக அரசர் சல்மான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார்.மன்னருடன் வந்துள்ள அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரைத் தங்க வைப்பதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கான அறைகளுக்கு மேலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

சௌதி அரேபியாவுடனான உறவை விரிவாக்கிக் கொள்வதற்கு இந்தப் பயணம் பயன்படும் என்றும், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அதிக அளவில் நம்பியிருப்பதை விரிவாக்க எண்ணுகின்ற சௌதி அரேபியாவின் முயற்சிகளுக்கும் இது உதவும் என்றும் ஜப்பான் நம்புகிறது.
மன்னர் சல்மான் தற்போது ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.ஏற்கெனவே மலேசியா, இந்தோனீஷியாவில் பயணம் மேற்கொண்ட அவர் அடுத்து சீனாவுக்கும் செல்ல இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply