முன்னாள் அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட இந்தியரின் அரசு வழக்கறிஞர் பதவியைப் பறித்தது ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட இந்தியரின் அரசு வழக்கறிஞர் பதவியை, அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் பறித்துள்ளது.இந்திய-அமெரிக்கரான பிரீத் பராரா (48) நியூயார்க் தெற்கு மாவட்ட அரசு வழக்கறிஞ ராக பதவி வகித்தார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த புகழ்பெற்ற அரசு வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.இந்நிலையில், பராரா உட்பட முந்தைய அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தால் நியமிக் கப்பட்ட 46 அரசு வழக்கறிஞர்களை உடனடியாக பதவி விலகுமாறு துணை அட்டர்னி ஜெனரல் கேட்டுக்கொண்டார். இதற்கு பராரா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், பராராவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்த உடன் பராரா கூறும்போது, “நான் பதவி விலகவில்லை. சில நிமிடங்களுக்கு முன்பு எனது பதவி பறிக் கப்பட்டது. என்னுடைய தொழில் வாழ்க்கை யில் இந்தப் பதவி எனக்கு கிடைத்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்” என்றார்.

அமெரிக்காவில் புதிய அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு பதவி களுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்து வந்தார். ஆனாலும், பராரா தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கலாம் என கூறி யிருந்தார். இந்நிலையில் திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply