மக்கள் பாதுகாப்புப் பிரதேசத்தில் புலிகள் ஏராளமான மிதிவெடிகள் விதைப்பு

முல்லைத்தீவின் கடற்கரையோரமாக அரசு அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் ஏராளமான மிதிவெடிகள் விதைத்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்த சூனிய பிரதேசத்திலுள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்குத் திட்டமிட்டுள்ள இராணுவத்தின் 53, 58, 58 ஆவது படைப்பிரிவுகளும் 8 ஆவது சிறப்புப் படைப்பிரிவும் அப்பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள ஏராளமான மிதிவெடிகளை அகற்றிக் கொண்டே முன்னேற வேண்டியுள்ளது.

புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள இரட்டை வாய்க்கால் சந்திப் பகுதி பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைவதற்கான பிரதான பாதையாகக் கருதப்படுகின்றது. 48 மணிநேர யுத்த தவிர்ப்பு முடிவுக்கு வந்த கையோடு ஏ-35 வீதியில் சமாந்தரமான நகர்வு ஒன்றை மேற்கொண்ட 53 ஆவது படைப் பிரிவினரும், 8 ஆவது சிறப்புப் படைப் பிரிவினரும் இரட்டை வாய்க்காலுக்கு மேற்கு பகுதியில் உள்ள புலிகளின் மணலால் கட்டப்பட்ட பாரிய அணை ஒன்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த மணல் அணை ஊடாக நடைபாதை ஒன்றை அமைப்பதற்காக ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மிதிவெடிகளைப் படையினர் அகற்ற வேண்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான சமரில் கணிசமான படையினர் இந்தக் மிதிவெடிகளால் காயங்களுக்குள்ளாகினர்.

யுத்த சூனிய பிரதேசத்தில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதை தவிர்க்கவே புலிகள் ஆரம்பத்தில் பெருந்தொகையிலான மிதிவெடிகளை இப்பிரதேசத்தில் விதைத்துள்ளதாக தப்பி வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply