அப்பல்லோ மருத்துவர் பிரதாப்ரெட்டி மீது கிரிமினல் வழக்கு: வக்கீல் பரபரப்பு புகார்

திண்டுக்கல் வளரும் சமூக வக்கீல்கள் சார்பில் மாநில செயலாளர் செபாஸ்டின் இன்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். ஆனால் அவர் பிணமாகவே ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். எனவே அப்பல்லோ இயக்குனர் பிரதாப் ரெட்டி உள்பட அவருக்கு உடந்தையாக இருந்த டாக்டர்கள் அனைவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் புதைந்து கிடக்கும் தகவல்களை வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு உண்மை நிலையை அளிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply