இந்த அரசாங்கத்துக்கு பிரபாகரன் பக்திமான், ராஜபக்ஷாக்கள் கொலைகாரர்கள் :கோட்டா

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிராக பேசுகின்ற எவரையும் இன்று காண முடியாதுள்ளதாகவும், அரச தரப்பினரால் பிரபாகரன் கடவுள் பக்தியுடையவர் போன்றும், ராஜபக்ஷாக்கள் கொலைகாரர்கள் போன்றும், தேசத் துரோகிகள் போன்றும் பேசப்படுவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசனம் தெரிவித்தார்.போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை இராணுவம் முழுமையாக நீங்கியவர்கள் எனும் நியாயங்களை முன்வைக்கும், வீரர்களின் வாய்மொழிச் சான்றுகள் எனும் பெயரிலான 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இன்று மாலை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மனித நேய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை முதற்தடவையாக இன்று வெளியிட்டு வைக்கப்படுகின்றது. அரசாங்கம் இதனை பயன்படுத்திக் கொள்ளுமா ? என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply