டொனால்டு டிரம்ப் – ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் – ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் – ஏஞ்சலா மெர்கல் இடையே நாளை பேச்சுவார்த்தை நடத்தப்பட இருந்தது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை பெரும் பனி புயல் நெருங்கி வருவதால் இருவருக்கிடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன், டொனால்டு டிரம்ப் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து, இருநாட்டு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிரம்பின் செய்தித்தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இருவருக்கும் இடையேயான சந்திப்பு வரும் 17-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாகவும் ஸ்பைசர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply