ஆர்.கே. நகரில் வெற்றிபெற்றால் முதல்வராக மாட்டேன்: டி.டி.வி தினகரன்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர் பதிவியை ஏற்க மாட்டேன் என்றும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர்வார் என தெரிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் பேட்டியில் மேலும் கூறியதாவது,

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட மார்ச் 23 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுவுக்கு நன்றி. ஜெயலலிதாவின் திட்டங்கள் ஆர்.கே.நகர் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
தமிழக மக்களை ஓ. பன்னீர்செல்வம் ஏமாற்றி வருகிறார். கட்சி நிர்வாகிகள் ஆர்.கே. நகரில் போட்டியிடுமாறு கேட்டு கொண்டனர். ஆர்.கே. நகரில் 50,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்.

எதிர்கட்சியாக தி.மு.க.வை மட்டுமே கருதுகிறோம். தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியும் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply