ஏமன் கடல் பகுதியில் சோமாலிய அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலி
ஏமன் நாட்டின் போர் பதற்றம் நிறைந்த பகுதியான செங்கடல் பகுதியில் கப்பலில் சென்று கொண்டிருந்த சோமாலியா நாட்டு அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.அகதிகள் வைத்திருந்த சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள ஹோடைடா பகுதியின் துறைமுகத்துக்கு சென்றடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஏமனில் செயல்பட்டு வரும் சர்வதேச குடியேறுவோர் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சோமாலிய அகதிகள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொண்டு துறைமுகத்துக்கு வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஏமனைச் சேர்ந்த 3 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பித்து வந்தவர்களில் படுகாயமடைந்த 30 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட படகில் 140 பயணிகள் பயணம் செய்ததாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்புகளும் பொறுப்பேற்காததால் இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.ஏமனில் கடந்த 2015 மார்ச் முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 7000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply