மனித வியாபாரம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் மீண்டும் இலங்கை : அமைச்சர் தலதா அதுகோரல
நான்காவது தடவையாகவும் மனித வியாபாரம் இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.இந்த நிலைமையை மாற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலைமையிலிருந்து இன்னும் சற்றேனும் கீழ் இறங்கினால், நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் இடைநிறுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித வியாபாரம் காரணமாக பொருளாதாரத் தடை விதிக்கும் பட்டியலிலும் எமது நாட்டின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
நாடு என்ற வகையில் இலங்கை இந்த மனித வியாபாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா அல்லது தொடர்ந்து அதே நிலைமையில் இருக்கின்றதா என்பதை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply