கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சோமாலியாவில் இன்று வரவேற்பு

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டவர்களை வரவேற்கும் நிகழ்வு சோமாலியாவின் போசாசோ துறைமுகத்தில் இன்று ஏற்படு செய்யப்பட்டுள்ளதாக அக்கப்பலின் பிரதான பொறியியலாளர் ஜயந்த களுபோவில தெரிவித்துள்ளார்.இதன்போது, கப்பலில் இருந்த இலங்கையர்கள் மற்றும் அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு அதிகாரிகள் ஆகியோர் வரவேற்று பாராட்டப்படவுள்ளனர்.

சோமாலிய கொள்ளையர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தற்போது சோமாலியாவின் போசாசோ துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

டுபாய் நாட்டுக்கு சொந்தமான இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருந்தது. பின்னர், எந்தவித உயிர் சேதமோ அல்லது பொருள் இழப்புக்களோ இன்றி கப்பலும், அதில் இருந்த இலங்கையர்களும் மீட்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply