ஏவுகணையை தொடர்ந்து வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை
வடகொரியா சமீபத்தில் 2 அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. அமெரிக்காவை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் அறிவித்துள்ளார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் அதி நவீன சக்தி வாய்ந்த ராக்கெட் என்ஜின் பரிசோதனையை வடகொரியா நடத்தியது. தனது சொந்த முயற்சியில் விண்ணுக்கு செயற்கை கோள்களை அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளது.
அதற்கான முயற்சியாக அது கருதப்படுகிறது. நேற்று நடந்த ராக்கெட் என்ஜின் பரிசோதனையை வடகொரியாவின் ராக்கெட் தொழிற்துறையில் புதிய உருவாக்கம் என அதிபர் கிம் ஜாங்-யங் பிரகடனம் செய்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்று அந்நாட்டு வெளியுறவு மந்திரியை சந்தித்தார். வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை இரு நாடுகளும் இணைந்து சமாளிப்போம் என உறுதி அளித்தார்.
இத்தருணத்தில் வட கொரியா ராக்கெட் என்ஜின் பரிசோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply