டாய்லெட் உள்ளே கேமரா: திருட்டை தடுக்க சீனா புதிய திட்டம்
சீனா நாட்டின் தெற்கு பகுதியான ஹாங்காங் முக்கிய வர்த்தக மற்றும் ஆண்மீக நகரமாக உள்ளது. இந்நகரத்தில் உள்ள பொது டாய்லெட்டுகளில் மக்களின் தேவைக்காக வைக்கப்பட்டிருக்கும் டிஷ்யூ பேப்பர்கள் அடிக்கடி மாயமாகி வந்தது. அதாவது இந்த டாய்லெட்டுகளை பயன்படுத்தும் மக்கள் டிஷ்யூ பேப்பர்களை தங்களது தேவை போக அதிகமான அளவை வீட்டிற்கு திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து இதே போல் டிஷ்யூ பேப்பர்கள் திருடப்பட்டு வந்ததால், இதை எப்படி தடுப்பது என ஆழ்ந்து யோசித்த ஹாங்காங் நகர நிர்வாகம் புது விதமான யோசனையை அறிமுகப்படுத்தியது. டாய்லெட் உள்ளே கேமரா வைக்கவேண்டும் என்பது தான் அந்த வித்தியாசமான யோசனை. டாய்லெட் உள்ளே கேமராவா? என நீங்கள் அச்சப்பட தேவையில்லை. நீங்கள் நினைப்பது போல இது படமோ, வீடியோவோ எடுக்கும் கேமரா அல்ல.
டாய்லெட் உள்ளே செல்லும் மக்கள், டிஷ்யூ பேப்பர்கள் வைக்கப்பட்டிருக்கும் ரோலர் பகுதியின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கேமரா முன்புறம் நின்று, தங்களது முக அடையாளத்தை காட்ட வேண்டும். முக அடையாளத்தை பதிவு செய்த கேமராவானது குறிப்பிட்ட அளவு டிஷ்யூ பேப்பர்களை வெளியே தள்ளிவிடும். ஏற்கனவே உள்ளே சென்ற நபர் குறிப்பிட்ட நேரம் கழித்துதான் மீண்டும் டாய்லெட்டை உபயோகப்படுத்த முடியும்.
டாய்லெட் உள்ளே இருக்கும் கேமராவில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் ஹாங்காங் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply