ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டி: சீமான் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று அறிவித்தார்.நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எங்களது கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.‘அரசியலில் தூய்மை’ பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் தகுதி இல்லை. இவர்களுக்கு மாற்றாகவும், பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராகவும் வலிமையான அரசியலை முன்னெடுத்து செல்ல உள்ளோம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அங்குள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தியும், எதிர்கால அரசியல் பற்றியும் பேசி வாக்காளர்களை சந்திப்போம். ஊழல் வழக்குகளை வண்டி வண்டியாக வைத்திருக்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

கொள்ளையடித்த பணத்தில் மக்களையும் கூட்டு சேர்ப்பதற்காகவே சில கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றன.

பெருந்தலைவர் காமராஜரும், கக்கனும் மக்களை எளிமையாகவே சந்தித்தனர். வெற்றி, தோல்வி பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

விளையாட்டு மைதானம் போன்றது தேர்தல் களம். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் முதல் பந்திலேயே கோல் அடிக்க முடியாது. அதேபோல வலிமையோடு விளையாடினால் நிச்சயமாக அந்த வீரர் கோல் அடிப்பார். இது கால்பந்து வீரர் மரடோனாவுக்கு கூட பொருந்தும்.

அந்த வகையில் நாங்கள் வலிமையுடன் தேர்தல் களத்தில் நிச்சயமாக கோல் அடிப்போம். மக்கள் மத்தியில் எங்களை கொண்டு செல்வதற்கு தேர்தலே சரியான வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே தேர்தலை சந்திக்கிறோம். தேர்தலை புறக்கணிப்பது என்பது மக்களை புறக்கணிப்பதற்கு சமமானதாகும்.

வலிமையோடு நாங்கள் தேர்தல் பயணத்தை தொடங்கி இருக்கிறோம். இதில் நிச்சயமாக வெல்வோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

பின்னர் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை அவர் பத்திரிகையாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply