செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இடம் குறித்து ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கும் இடம் குறித்து நாசா விஞ்ஞானிகள் உதவியுடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆய்வைத் தொடங்கி இருக்கிறது.செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை ரெட் டிராகன் விண்கலம் மூலம் அனுப்பத் திட்டமிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதிக்கவுள்ளது.இதற்காக செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்க பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

முதல் ரெட் டிராகன் விண்கலத்தை 2020 ஆம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply