உலக தண்ணீர் தினம்: பெண்களை நினைவு கூற வேண்டிய நாள்

அதாவது உலக அளவில் கிட்டத்தட்ட 12 கோடி மணி நேரம் (125மில்லியன் மணித்துளிகள்). இதோடு கூடவே 21கோடி மணி நேரங்கள் கழிப்பறை வசதிகளையும் தேடி அலைகின்றனர். தண்ணீரும் – சுகாதாரமும் ஒன்றோடன்று பின்னி பிணைந்தது என்பதற்கான சான்றாக இதை எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் ஐநா, யுனிசெஃப் கூறும் ஆய்வுகளில் உள்ளவை.தண்ணீர் சேகரிக்க செல்லும் குழந்தைகள் அதிக நாள் விடுப்பு எடுக்க நேரிடுகிறதாம். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் பெண் குழந்தைகள் தண்ணீர் எடுக்க செல்லும் நேரம் முப்பது நிமடங்களிலிருந்து, பதினைந்து நிமிடங்களுக்கு குறைந்தாலுமே, அவர்கள் பள்ளி செல்லும் நாட்கள் அதிகரிப்பதாகவும் ஐ.நா ஆய்வறிக்கை கூறுகிறது.

குறிப்பாக வறட்சி மிரட்டியெடுக்கும் காலங்களில், விவசாய வேலைகள் இல்லாததால் ஆண்கள் வேலைக்காக இடம் பெயர்ந்து சென்றுவிட பெண்களும், குழந்தைகளும்தான் குடும்பத்திற்கு தேவையான தண்ணீரை சேகரிக்க வேண்டியுள்ளது.

அதே போல் அதிக நடை தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண்களுக்கு முதுகுவலி, உடல் சோர்வு, தொடர்ந்த இடுப்பு வலி போன்ற தீவிர உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக சுவீடனைச் சேர்ந்த மருத்துவ ஆய்வறிக்கை கூறுகிறது.

நாம் இதற்கெல்லாம் ஆய்வறிக்கைகளை தேடிப் போகவேண்டாம். 140ஆண்டு கால வறட்சியை சந்தித்திடாத தமிழகத்தில், நம் ஊர்களில், நம் அண்டை வீட்டில், ஏன் நம் வீடுகளிலேயே பெண்கள் தண்ணீருக்காக அலைவதைக் காணமுடியும்.

இந்தியாவில், மஹாராஷ்டிரா denganmal போன்ற வறட்சி மிகுந்த பின்தங்கிய கிராமங்களில், தண்ணீர் சேகரித்து வருவதற்காகவே இரண்டு, மூன்று பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் water wives( panniwali bais) எனக் குறிப்பிடப்படும் அவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.

நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலமாக அதிக பயன் விளையும் என்பதைத்தான் இதற்கு தீர்வாக ஆய்வறிக்கைகள் சொல்கின்றன்.

இந்த ஆண்டு உலக தண்ணீர் தினத்திற்கான மையக்கருத்து என்னவோ (theme) “Waste water” எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உணவு உற்பத்தியில், விவசாயத்தில், குடும்பத்திற்கான நீரை சேகரிப்பதில் என இச்சமூகத்தில் அதிகம் உழைக்கும் பெண்களை உலக தண்ணீர் தினமான இந்நாளில் நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply