மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியிலேயே தீர்வு

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்கு இரண்டு நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.   மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சர்வதேச கடல் எல்லைக்குச் செல்கின்ற தென்னிந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  தமிழக மீனவர்கள் குழுவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 139 மீன்பிடி படகுகளையும் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இந்திய மீனவனின் மரணம் தொடர்பில் சாதாரண விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதேவேளை, கைது செய்யப்பட்டு இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பது தொடர்பில் இருநாடுகளின் அதிகாரிகள் மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, இந்திய மீனவரின் மரணம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது என்றும் அமைச்சர் சுவராஜ், மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply