வெளிநாட்டு பணியாளர்களுக்கு சுங்கவரி சலுகை அதிகரிப்பு
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்புபோது அவர்களுக்கான சுங்க வரிகளில் மேலும் சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பும்போது 1500 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொண்டுவருவதற்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவருவதற்கான வரியை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய ஒரு வருட காலம் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு நாடு திரும்புபவர்கள் குளியலறை சாதனங்கள், படுக்கையறை சாதனங்கள், மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வை வழங்கக் கூடிய சூரிய மின்கலங்கள், மடிகணனி, பிரின்டர், கையடக்கத்தொலைபேசிகள் இரண்டு, 350 சீசீக்கு குறைவான மோட்டார்சைக்கிள், 55 அங்குலம் கொண்ட புதிய ரக தொலைக்காட்சிப் பெட்டி ஆகிய பொருட்களை தம்முடன் எடுத்துவர முடியும்.
இது வரை காலமும் 45 அங்குல தொலைக்காட்சியுடன் கையடக்க தொலைபேசி ஒன்றை கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குளிரூட்டிகள், 55 அங்குலத்துக்கும் அதிகமான தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்றவற்றை தம்முடன் எடுத்துவருவதை தவிர்க்குமாறு பஸ்நாயக்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஆயினும் இந்த சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வெளிநாடொன்றில் குறைந்தது ஒரு வருடம் பணியாற்றியிருப்பது அவசியம் என, சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply