சீனாவில் மிதமான நிலநடுக்கம்
சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள யாங்பீ மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம், “சீனாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 5.25 மணியளவில் யாங்பீ மாகாணத்தில் அஜ்ஜா, பப்பிங் கிராமங்களை மையமாகக் கொண்டு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. சில இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply