கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இன்று மீண்டும் திறப்பு

புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இன்று (06) மீண்டும் திறக்கப்படவுள்ளது.இதற்கமைய விமான நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுக்கப்படவுள்ளன. புனரமைப்புப் பணிகளுக்காக கடந்த ஜனவாரி மாதம் 6 ஆம் திகதியிலிருந்து விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்ததாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புனரமைப்புப் பணிகள் சீன நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.புனரமைப்புப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய விமானமாக கருதப்படுகின்ற ஏ_380 விமானத்தை தரையிறக்குவதற்கான வசதிகள் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply