சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் 33 இளைஞர்கள் படுகொலை

சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் 33 இளைஞர்களை படுகொலை செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவின் ஈராக் எல்லையையொட்டிய தெயீர் அல்-ஸர் மாகாணத்தில் உள்ள மாயதீன் என்னும் நகரில் சுமார் 18 வயது முதல் 25 வயது மதிக்கத்தக்க 33 இளைஞர்களை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் கொடூரமாக கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் அந்த இளைஞர்களைப் படுகொலை செய்தது உறுதியாகியுள்ள போதிலும், அந்த இளைஞர்களின் அடையாளம் குறித்த முழு விபரங்கள் இன்னும் தெரியவில்லை. அவர்கள் சிரிய ராணுவ வீரர்களா அல்லது சிரியா அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படையைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவரவில்லை

ஐ.எஸ் தீவிரவாதிகள் இதுபோன்ற கொடூரமான படுகொலை சம்பவங்களை இதற்கு முன்னரும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான நகரமான மொசூல் மற்றும் அல்-பால்மைரா ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக, தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply