ஸ்ரீ ல.சு.கட்சிக்கும், ஐ.ம.சு.முன்னணிக்கும் இடையில் முரண்பாடு இல்லை : ஸ்ரீ ல.சு.க.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றின் பிரதான பதவிகளில் எந்தவித மாற்றமும் இடம்பெறவில்லையெனவும், ஊடகங்களில் வெளிவரும் செய்தியில் உண்மையில்லையெனவும் ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ல.சு.கட்சிக்கும் ஐ.ம.சு.முன்னணிக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடும் இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக்கி தமது அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள கனவு காண்பவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு நோக்கம் நிறைவேறாத போதே ஊடகங்களில் பொய்யைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply