விமல்வீரவங்ச ஏன் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு வந்தார்?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பி. நேற்று மாலை திடீரென மீண்டும் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் சிறைச்சாலையிலிருந்தபோது உதவி ஒத்தாசை புரிந்தவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அரசின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி முதல் 87 நாட்கள் விமல் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவரது மகளின் சுகயீனத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 7 ஆம் திகதி வீரவங்சவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply