ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் பயங்கரம் – ஓபிஎஸ் ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு!

ஆர்.கே நகர் 41-வது வட்டம் எழில்நகரில் இன்று இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனை அதரித்து அந்த பகுதி கிளைச் செயலாளர் நித்யானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கும்பலாக வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர்.இதையடுத்து, அவர் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிற கட்சியினர் சிதறி ஓடினார்கள். தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் ராமர் மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பின்னர், நித்யானந்தத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நித்யானந்தத்தை வெட்டியது சசிகலா ஆதரவு ஈரோடு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் என்று பன்னீர்செல்வம் அணியினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

நித்யானந்தத்துக்கு உடம்பில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால், அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆர்.கே.நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply