எகிப்து தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: பிரதமர் மோடி கண்டனம்

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளது டான்டா நகரம். அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தல், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, தேவாலயத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில், பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பலர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோர தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 42 பேர் காயமடைந்ததாகவும் அரசு ஊடகத்தில் செய்தி வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான தகவல்களில் பலி எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது என்றும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தேவாலயத்தில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவு செய்திருந்த பிரதமர் மோடி, எகிப்து சம்பவம் குறித்து தான் மிகவும் வேதையடைந்தேன், இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். என் நினைவு முழுவதும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தாரை நினைத்து கொண்டிருக்கிறது. காயமுற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply