பண்டிகைக் காலத்தில் வைத்தியசாலைகளில் தேவைக்கேற்ப தாதியர்களை நியமிக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வைத்தியசாலைகளில் தேவைக்கேற்ப தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை நியமிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 1300 தாதியர்களை பணிக்கு அமர்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் மற்றும் பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துக்களின் போது நோயாளர்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை , திருகோணமலை வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவைக்கேற்ப ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜெயவிக்ரம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply