10 மாத ஆண் குழந்தையை 10 வயது பெண் குழந்தையாக மாற்றிய திருகோணமலை வைத்தியசாலை (Photos)

பணத்திற்கு உயிரை பறிக்கும் கூட்டத்தின் உண்மை முகத்தினை ஊர் அறிய வாசித்த பின் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்

இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அக்காவின் பத்து மாதமே ஆன மகனுக்கு நேற்று வைத்தியரின் ஆலோசனைப்படி திருகோணமலை உவர்மலையில் அமைந்துள்ள சீமெட் (CEYMED) வைத்தியசாலையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு அறிக்கையை பெற்று வைத்தியரிடம் காட்டியபோது அதில் பத்து வயதை உடைய பெண்னின் அறிக்கை என்று குறிப்பிட்டு இருப்பதை கவனித்த வைத்தியர் வேறு ஒருவரின் அறிக்கையை மாறி உங்களிடம் கொடுத்து இருக்கலாம் இதனை நம்பி மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது என்றும் சீமெட் வைத்தியசாலைக்கு சென்று கேட்க்குமாறும் கூறினார்.

இன்று காலை நான் நேரில் சென்று அவர்களிடம் கேட்டபொழுது பிழை தங்களுடையதுதான் என்றும் மீண்டும் குழந்தையை அழைத்துவந்து பரிசோதனையை செய்யுமாறும் அதற்க்கு தாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க போவதில்லை எனவும் மிக சாதாரணமாக கூறினார்கள்.

இங்கே பிரச்சனை என்னவென்றால் இன்று மீண்டும் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை பார்த்த வைத்தியர் குழந்தையை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறி குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்றே இவர்கள் சரியாக அறிக்கையை தந்திருந்தால் எம்மால் உடனடியாக சிகிச்சையை தொடர்ந்திருக்க முடியும் அத்தோடு இவ்வாறான பரிசோதனைகளை அடிக்கடி செய்ய குழந்தைகளால் அதனை தாங்க முடியுமா? தெரியவில்லை.

அரட்டையும் வரும் நோயாளிகளோடு சிடுசிடுவென இருப்பதும் இடையிடையே வேலையை செய்வதுமாக இருக்கும் இந்த உதவாத கூட்டம் செய்யும் தவறுக்கு நோயாளிகள் பாதிக்கப்பட வேண்டுமா ? இவர்களின் கவனயீனத்திற்கு நோயாளிகள் பலியாக வேண்டுமா மருத்துவம் சேவை என கடைவாய் பல் தெரிய கதறும் கூட்டம் இப்பிடியான சிறு பிழைகளால் உயிர்களை காவு வாங்குவதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை வாசிக்கும் நீங்களோ உங்கள் உறவுகளோ இந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்ல நேர்ந்தால் தயவுசெய்து விழிப்பாக இருங்கள் காசு மட்டுமே குறியாக இருக்கும் கொலைகார கூட்டம் வாழும் இடம் அது.

 

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply