டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரேமலதா

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.பின்னர் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விஜயகாந்த் ஆணைக்கிணங்க அவர்களை சந்தித்து பேசினேன். தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். அவர்களுடன் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டேன்.

விவசாயி அய்யாக்கண்ணு பேசும்போது, கட்சிக்காரர்களுடன் நாங்கள் பேசினால் எங்களுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று வேதனையோடு தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக நான் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினேன். மற்ற மத்திய மந்திரிகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். நாங்களும் எங்களால் முடிந்த வரையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும். எனவே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது ஊழல் நிறைந்திருப்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply