ஜ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு இப்போதும் அசமந்தமே : சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு
இலங்கை அரசு அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுவதால், ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றது. தீர்மானம் நிறைவேற்ற முன்னரும் இவ்வாறான நிலையே தொடர்ந்தது. தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவ்வாறான நிலமையே தொடர்கின்றது. இவ்வாறு நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் செயலர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்குவதற்கு சிவில் அமைப்புக்களும் இணங்கியிருந்தன. இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கித் தீர்மானமும் நிறைவேற்ற் பட்டிருந்தது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கை அரசு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளதா, இது தொடர்பில் சிவில் சமூகத்துடன் ஏதாவது ஆராய்ந்துள்ளதா என்பது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது தொடர்பில் அக்கறை கொள்ளாது இருக்கின்றது. அரசமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றது.
ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னரும் இவ்வாறுதான் செயற்பட்டது. அதன் பின்னரும் அவ்வாறுதான் இயங்குகின்றது. சிவில் அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்தான் செயற்படுகின்றன. தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கின்றன – என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply