தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க முடியாது : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
தமிழ் அரசியல் கைதிகளைச் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய பின்னர்தான் விடுதலை செய்யமுடியும். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய இயலாது.இவ்வாறு கொழும்பு அரசின் மீள் குடியேற்ற அமைச் சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சுவாமிநாதனிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமற்றது. கைதிகள் மீது சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே விடுவிக்க முடியும். சட்டத்தைப் பின்பற்றி விடுவிப்பதே சாத்தியமான விடயம்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விவரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. எனவே அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்கள் தேவையானவர்கள் எந்த நேரத்திலும் எனது அமைச்சுடன் தொடர்புகொள்ளலாம் என்றார்.
அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றுகோரி வடக்கு-கிழக்கு உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இன்றுவரை அவர்களது போராட்டங்கள் கொண்டிருக்கின்றன. அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் இதுவரை அது சாத்தியமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply