பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் பணியில் முதல் கட்ட வெற்றி; ஆயிரக்கணக்கில் மக்கள் படையினரின் பகுதியை நோக்கி வந்த வண்ணமுள்ளனர்

அரசு அறிவித்திருந்த மக்களில் பாதுகாப்புக்கான யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் புலிகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மனிதக் கேடயமாக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் நோக்குடன் இன்று (ஏப். 20) காலை படையினர் புதுமாத்தளம் பகுதியில் புலிகளினால் அமைக்கப்பட்டிருந்த 2.5 கி.மீ நீளமான மண் அணைக்கட்டை கைப்பற்றி பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற பாதையை அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயத்திலிருந்து இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளதாக கள நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply