அமைதியான சுபீட்சம் மிக்க ஆண்டாக அமையட்டும் : ரணில்
விவசாய வாழ்வொழுங்கினைக் கொண்ட அனைத்துக் கலாசாரங்களுக்கும் பொதுவானதாக காணப்படும் அறுவடைத் திருவிழா அல்லது உலகின் இருப்புக்கு முக்கிய காரணியாக அமையும் சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நடாத்தப்படும் சூரியத் திருவிழாவானது இலங்கையரான நாமும் சித்திரை மாதத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடும் மாபெரும் கலாசாரத் திருவிழாவாகும்.
சிங்களவர், தமிழர் அனைவரும் இணைந்து இன, மத, கட்சி, நிற பேதமின்றி ஒற்றுமையாக, மிகுந்த குதூகலமான மனதுடன் கொண்டாடும் இவ்வாறான தேசிய பண்டிகையொன்று இல்லையென்றே கூறலாம். அந்த மகிழ்ச்சி, சமாதானம், நல்லிணக்கம், ஒற்றுமை என்பவற்றை எப்போதும் மனதில் இருத்தி பேணிச் செல்வதன் ஊடாக முழு சமூகமும் அமைதியான சிறந்த சமூகமாக மாற்றமடையும்.
இந்த சிங்களத் தமிழ் புத்தாண்டுடன் இணைந்துள்ள சம்பிரதாய பழக்கவழக்கங்கள் நவீன உலகின் மத்தியில் கூட நிராகரிக்க முடியாதளவு சூழல் நேயம், மனித நேயம் என்பவற்றினால் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் இந்த சம்பிரதாய கலாசார உரிமையை எமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, எதிர்கால சந்தியினருக்காகப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
அனைத்து பேதங்களையும் மறந்து சிறந்த சமூகமொன்றையும், அபிவிருத்தியடைந்த நாடொன்றையும் கட்டியெழுப்ப திடமான மனவுறுதியோடு அர்ப்பணிப்புடன் பணியாற்றும், அமைதியான, சுபீட்சம் மிக்க புத்தாண்டாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.
ரணில் விக்ரமசிங்க
பிரதம அமைச்சர்
(பிரதமர்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply