சகவாழ்வு, நல்லிணக்கத்துடன் எழுச்சி பெறுவோம் : மைத்திரிபால சிறிசேன

சுபீட்சம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் பற்றிய புதிய எதிர்பார்ப்புகளுடன் 2017ஆம் ஆண்டு மலர்ந்திருக்கிறது. பேண்தகு யுகத்தின் ஊடாக வறுமையை நம் நாட்டிலிருந்து அகற்றும் உணர்வுபூர்வமான உறுதிப்பாட்டுடன் 22 மில்லியன் இலங்கையர்களும் ஒன்றிணைந்து இருக்கின்றனர். நிச்சயம் இச்சவாலை நாம் வெற்றிகொள்ள வேண்டும். அதனை சாதிப்பது எமக்கு கடினமான இலக்கு அல்லரூபவ் சவால்களைக் கண்டு சளைக்காத தன்னம்பிக்கையும் மன வலிமையும் மிக்க மனிதர்களாலேயே மானிட வளர்ச்சியின் பரிணாமம் சாத்தியமாகியிருக்கின்றது.

 

 

பொது நன்மையைக் கருதி காலத்தை உகந்த வகையில் முகாமைத்துவம் செய்து சிறந்த முறையில் நிறைவேற்றுவதன் மூலமே எம்மால் உயர்ந்த இலக்கை அடைய முடியும். எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள நேரிடும் இயற்கையின் எதிர்மறையான நிலைமைகளை தீர்க்கதரிசனத்துடன் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

 

 

இயற்கை சூழலை நாம் வெகுவாக நேசிக்க வேண்டும் என்பதையே காலநிலை எமக்கு உணர்த்துகின்றது. அதேவேளை அநேகமான முடிவுகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் மிகுந்த பலசாலி இயற்கையே என்பதை நாம் ஒருபோதும் மறந்திடலாகாது.

 

 

 

கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகம் எந்த அளவு வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட போதிலும்ரூபவ் அபிவிருத்தி குறித்த எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்வதில் இயற்கையின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியமான நிபந்தனையாக அமைகிறது.

 

 

 

உலக அரசியல் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல சிக்கல்கள் மேல் எழுந்துவரும் பின்புலத்திலேயே நாம் புத்தாண்டிற்குள் பிரவேசிக்கின்றோம். வறுமையை அகற்ற வேண்டும் என்ற பெரும் பொறுப்பை முன்னிலைப்படுத்தி எம்முன் இருக்கும் சவால்களை வெற்றிகொண்டு வளமான இலங்கையை நோக்கிச் செல்லும் இந்த பயணத்தை வெற்றிகொள்வோம் என்ற உறுதிப்பாட்டுடன் பிறக்கும் இப்புத்தாண்டில் ஒரு மனதுடனும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் செயற்படுவோமாக.

 

 

 

உங்கள் அனைவருக்கும் சுபீட்சமான புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

 

மைத்திரிபால சிறிசேன

 

ஜனாதிபதி

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply