புதுவருடத்திலாவது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாருக்கு தீர்வு கிடைக்குமா? : ப.உதயராசா

புதுவருடம் பிறக்கின்ற நேரத்தில் கூட உறவுகளை மீட்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாருக்கு இவ்வாண்டிலாவது தீர்வு கிடைக்க வேண்டும் என சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வருடமும் கழியும் போதும் புது வருடத்திலாவது எமக்கு நல்ல வாழ்வு அமைந்து விடாதா? என்று ஏங்கும் பலரின் கனவுகள் நனவாகி அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கப்பெற்று வழமுடன் வாழ வேண்டுகிறேன்.

தங்களது பிள்ளைகளை தொலைத்துவிட்டும், கையளித்துவிட்டும் ஏங்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கும் அரசியல் கைதிகள் என்ற பெயரில் பல ஆண்டுகாலமாக சிறைப்பட்டிருக்கின்ற அப்பாவிகளின் உறவுகளுக்கும் இவ்வாண்டிலாவது நல்லது நடக்க வேண்டும்.

புதுவருடம் பிறக்கின்ற நேரத்தில்கூட தங்களது உறவுகளை மீட்கும் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு வீதிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த தாய்மாருக்கு இவ்வாண்டிலாவது உரிய பதில் கிடைக்க வேண்டுமென இந்த புதுவருடத்தில் அனைவரும் பிராத்திப்போம்.

அதேவேளை நாட்டின் தலைவர்கள் இதய சுத்தியுடன் செற்பட்டு நமக்குள் புரையோடிப்போயுள்ள இன முரண்பாடுகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்த் தீர்வொன்றை இவ்வாண்டிலாவது வழங்கி புதுவருடத்தின் ஊடாக இணைந்திருக்கும் இனங்கள் சம உரிமையுடனும், சகோதரத்துவத்துடனும் நிரந்தரமாக இணைந்து வாழ வழிசமைக்க வேண்டுகின்றேன் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply